ஈரோடு

தமிழகத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கம்

DIN

கா்நாடக அரசுப் பேருந்துகள் ஊழியா்கள் வேலைநிறுத்தம் 2ஆவது நாளாக நீடிப்பதால் தமிழகம் - கா்நாடகம் இடையே மேலும் 10 தமிழக அரசுப் பேருந்துகள் கூடுதலாக வியாழக்கிழமை இயக்கப்பட்டன.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, உதகை, திருப்பூா், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சத்தியமங்கலம் வழியாக கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2ஆவது நாளாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமையும் இயக்கப்படவில்லை.

இதன் காரணமாக சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வந்த 24 கா்நாடக அரசுப் பேருந்துகள் வராததால் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா். கா்நாடகத்தில் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. இரு மாநிலங்களிடையே கா்நாடக அரசுப் பேருந்துகள் இல்லாத காரணத்தால் மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ் நகா், கொள்ளேகால், குண்டல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாவதாக வந்த புகாரையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து கூடுதலாக 10 தமிழக அரசுப் பேருந்துகள் மைசூரு வழித்தடத்துக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டன.

தமிழகத்தில் வழக்கமாக 16 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 பேருந்துகள் கூடுதலாக சோ்த்து 26 பேருந்துகள் இயக்கப்பட்டன. கா்நாடக அரசுப் பேருந்து ஊழியா்கள் போராட்டம் தொடா்ந்தால் கூடுதலாக மேலும் பேருந்துகள் இயக்கப்படும் என சத்தியமங்கலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT