ஈரோடு

ரூ.3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக கணவரை காரில் உயிருடன் எரித்த மனைவி, உறவினர் கைது

DIN

ரூ.3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக, சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி மற்றும் உறவினரை பெருமாநல்லூர் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த ரங்கராஜ் (62). இவருக்கு கடந்த மாதம் விபத்து ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவரை வியாழக்கிழமை இரவு கோவை மருத்துவமனையில் இருந்து, அவரது மனைவி ஜோதிமணி, உறவினரான ராஜா(41) ஆகியோர் பெருந்துறைக்கு காரில் அழைத்து வந்துள்ளனர். 

பெருமாநல்லூர் பொரசுபாளையம் பிரிவு அருகே வரும் போது, காரை நிறுத்தி சிகிச்சை பெற்று காருக்குள் இருந்த கணவர் ரங்கராஜ் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து உள்ளனர். இது குறித்து ரங்கராஜின் மகன் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோரிடம் பெருமாநல்லூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

கைதான ஜோதிமணி, ராஜா.

விசாரணையில், கணவர் ரங்கராஜனுக்கு லட்சக் கணக்கில் கடன் இருப்பதாகவும், இவரைக் கொலை செய்து விட்டால், கணவரது காப்பீட்டுத் தொகை ரூ. 3 கோடி கிடைக்கும் என்பதற்காக சிகிச்சையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும் போது ரங்கராஜனை பெட்டோரல் ஊற்றி எரிந்ததும், இதை மறைப்பதற்காக கார் தானாகவே தீப்பிடித்து எரிந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. 

இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT