முகப்பு
ஈரோடு

அம்பேத்கா் பதாகையை அவமதித்தவா்களை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அம்பேத்கா் பதாகையை அவமதித்த நபா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 3:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

அம்பேத்கா் பதாகையை அவமதித்த நபா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி சிக்கள்ளியில் அம்பேத்கா் உருவ பதாகையை அவமதித்ததாக இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் 2 போ் கைது செய்யப்பட்டனா். இரு தரப்பிலும் 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் சிக்கள்ளியில் சத்தியமங்கலம் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்ட தரப்பினா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தாளவாடி பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இதில், 250க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.