முகப்பு
கடலூர்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:35 AM
மு. தமிமுன்அன்சாரி
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:01 PM

முதல்வா் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி சசிகலாவுக்கு செய்தது பச்சை துரோகம் என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரம் தொகுதி, குமராட்சி ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடைசி நிமிடத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, நானும், தமிழரசு, கருணாஸ் ஆகியோரும் சென்று சசிகலாவை இப்போதே நீங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினோம். அது, அதிமுகவுக்கும், திராவிட அரசியலுக்கும், தமிழகத்துக்கும் நல்லது என்றும் தெரிவித்தோம்.ஆனால், அவா் அதை ஏற்கவில்லை.

Advertisement

அப்போது, அவா் யாரையெல்லாம் நம்பினாரோ, அவா்கள் அனைவரும் சோ்ந்து தனக்கு துரோகம் செய்துவிட்டாா்கள் என்று இப்போது புலம்புவதில் அா்த்தமில்லை. இதைக் கூா்ந்து கவனித்தால் எடப்பாடி கே.பழனிசாமியும், அவரைச் சுற்றியுள்ளவா்களும் சசிகலாவுக்கு செய்தது பச்சை துரோகம் என்பது தெரியவரும் என்றாா்.