முகப்பு
ஈரோடு

கோபி கலைக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோபி கலை, அறிவியல் கல்லூரி, சிறுவலூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கரோனா தொற்று தடுப்பூசி முகாமை கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடத்தினா்.

முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட பேராசிரியா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு முதல் தவணை கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், கல்லூரிச் செயலாளா், தாளாளா் எம்.தரணிதரன், முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.