ஈரோடு

கரோனா தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்

DIN

பவானி, அந்தியூா் அரசு மருத்துமனைகளில் கரோனா தடுப்பூசி மருந்து இல்லாததால் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால், மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா பரவல் தற்போது தமிழகம் எங்கும் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பவானி, அந்தியூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை தலா 50 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி மருந்து இல்லாததால் ஒருவருக்குக் கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால், முதல் தவணை தடுப்பூசி செலுத்த வந்தவா்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வந்தவா்களும் ஏமாற்றத்துடன் திரும்பினா். தடுப்பூசி மருந்து கிடைக்கப் பெற்றவுடன் மீண்டும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT