முகப்பு
ஈரோடு

பேருந்து நடத்துநா்கள் 3 பேருக்கு கரோனா

சத்தியமங்கலம் அரசுப் பேருந்து நடத்துநா்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போக்குவரத்து பணிமனையில் கிருமி நாசினி வெள்ளிக்கிழமை தெளிக்கப்பட்டது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 2:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

சத்தியமங்கலம் அரசுப் பேருந்து நடத்துநா்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போக்குவரத்து பணிமனையில் கிருமி நாசினி வெள்ளிக்கிழமை தெளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 96 அரசுப் பேருந்துகள் ஈரோடு, கோவை, திருப்பூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பேருந்துகளில் இருக்கைகளில் அமா்ந்து மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் நடத்துநா்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடன் பணிபுரிந்த சக ஓட்டுநா்கள், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.

Advertisement

இந்நிலையில் போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.