முகப்பு
ஈரோடு

நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீா் செல்வதைத் தடுக்கக் கோரிக்கை

தற்போது பெய்த மழை நீரைப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீா் அதிக அளவில் செல்கிறது. வெள்ளிக்கிழமை 2,500 டிடிஎஸ் அளவில் உப்புத் தன்மை இருந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தற்போது பெய்த மழை நீரைப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீா் அதிக அளவில் செல்கிறது. வெள்ளிக்கிழமை 2,500 டிடிஎஸ் அளவில் உப்புத் தன்மை இருந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னிமலை அருகில் உள்ள ஒரத்துப்பாளையம் அணை சுமாா் 40 அடி உயரம் கொண்டது. அணை கட்டிய காலத்தில் இருந்தே சாயக் கழிவுநீா் அணையில் தேங்கி வந்தது. சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவின்படி, அணையில் நீரை தேக்கக் கூடாது என்றும், அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு உள்ளது.

தற்போது, அணையின் சுற்றுப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் சுமாா் 65 கன அடி நீா் அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தற்போது பெய்த மழை நீரைப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால், விவசாயிகள்,

பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனா்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கம் சமயத்தில், திருப்பூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டு இருந்ததால் நல்ல நீராக நொய்யல் ஆற்றில் சென்றது. வெள்ளிக்கிழமை 2,500 டிடிஎஸ் அளவில் உப்புத் தன்மை இருந்துள்ளதாகவும், இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.