ஈரோடு

பக்தர்கள் இன்றி நடைபெற்ற பவானி சங்கமேஸ்வரர்-வேதநாயகி திருக்கல்யாண உற்சவம்

DIN

கரோனா தடையால் கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் இல்லாமல் பவானியில் சங்கமேஸ்வரருக்கும், வேதநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த இரு வருடங்களாக இக்கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் இல்லாமல் மிகவும்  எளிமையான முறையில் நடைபெற்றது.

தொடர்ந்து, சங்கேமேஸ்வரர் கோயில் சன்னதியில் சிறப்பு யாக வழிபாடுகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து, தீபாராதனை வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில், கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT