ஈரோடு

பண்ணாரி அம்மன் கோவிலில் தரிசனம் ரத்து

DIN

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
 இன்படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் தடை விதிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து கோவிலின் முகப்பு நுழைவுவாயில் மூடப்பட்டு அதில் கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதாகை ஒட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவிலில் ஆகம விதிகளின்படி அம்மனுக்கு நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டதால் பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன்காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள தேங்காய் பழம் விற்பனை கடை, புகைப்பட விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளன. கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் கோவில் வளாகம் முன் தேங்காய் பழம் உடைத்து  வழிபாடு செய்து வருகினறனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT