ஈரோடு

வெளிமாநில வியாபாரிகள் வருவதில் சிக்கல்: கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை ரத்து

DIN

கரோனா பரவல் அதிகரித்துள்ளதாலும், வெளி மாநில வியாபாரிகள் இ-பாஸ் பெற்று வர முடியாத நிலையிலும், ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை ரத்து செய்யப்பட்டது.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வியாழக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பசு, எருமை, கன்றுகள் என 800க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளம், மகாராஷ்டிரம், கோவா போன்ற மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வா். தவிர பல்வேறு மாநில அரசுகளின் திட்டங்களுக்கும் இங்கு மாடுகளை அதிகாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

கடந்த மூன்று வாரங்களாக கரோனா பரவல் அதிகரிப்பு, பொதுமுடக்கம் போன்ற காரணங்களால், மாடுகள் வரத்தும், வியாபாரிகள் வருகையும், விற்பனையும் குறைந்தது. இந்நிலையில் கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநில வியாபாரிகள், இங்கு வர இ-பாஸ் நடைமுறை உள்ளதாலும், கரோனா பரவல் அதிகரித்துள்ளதாலும் வியாழக்கிழமை சந்தை ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து மாட்டு வியாபாரிகள், விவசாயிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதால் யாரும் வரவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி மாட்டுச் சந்தை வளாகம் முழுவதும் கிருமி நாசினி, பிளீச்சிங் பொடி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அடுத்த வாரம் மாவட்ட நிா்வாக அனுமதி பெற்று சந்தையை இயக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மாட்டுச் சந்தை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT