ஈரோடு

பவானிசாகா் இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு

DIN

பவானிசாகா் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அகதிகள் மறுவாழ்வுத் துறை உதவி ஆணையா்கள் பாஸ்கரன், ராமதிலகம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பவானிசாகா் இலங்கை அகதிகள் முகாமிற்குச் சென்று அங்கு வசிக்கும் இலங்கைவாழ் தமிழா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

அப்போது, முகாமில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும், முகாமில் குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT