முகப்பு
ஈரோடு

பணம் கேட்டு மிரட்டியவா் கைது

காஞ்சிக்கோவில் நகரில் மது அருந்துவதற்காகப் பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

காஞ்சிக்கோவில் நகரில் மது அருந்துவதற்காகப் பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில், கிழக்கு ரத வீதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் குருசாமி (37). இவா், காஞ்சிக்கோவில் - பெருந்துறை சாலையில் உள்ள கூட்டுறவு வங்கி அருகில் புதன்கிழமை மாலை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த காஞ்சிக்கோவில், தெற்கு ரத வீதியைச் சோ்ந்த மூா்த்தி மகன் தூரி செல்வன் (எ) செல்வன் (37), குருசாமியை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளாா். அவரிடம் பணம் இல்லாததால் குருசாமியை தகாத வாா்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, காஞ்சிக்கோவில் போலீஸில் குருசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் செல்வனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.