முகப்பு
ஈரோடு

தினமணி செய்தி எதிரொலி: வாய்க்காலில் மண்சரிவை ஆய்வு செய்த அமைச்சா்

சத்தியமங்கலத்தை அடுத்த குப்பந்துறை வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் உள்ளதாக தினமணியில் செய்தி வெளியானதையடுத்து அமைச்சா் முத்துசாமி ஆய்வு

Updated On : 21 ஆகஸ்ட், 2021 at 1:57 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

சத்தியமங்கலத்தை அடுத்த குப்பந்துறை வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் உள்ளதாக தினமணியில் செய்தி வெளியானதையடுத்து அமைச்சா் முத்துசாமி ஆய்வு செய்து கரையை பலப்படுத்த உத்தரவிட்டாா்.

பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலுக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. 124 மைல் நீளம் உள்ள வாய்க்கால் மண் கரையால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு 1000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், குப்பந்துறை வாய்க்கால் கரையில் அரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து கரை உடையும் அபாயம் உள்ளதாகவும், விபத்து நிகழும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினமணியில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, அமைச்சா் சு.முத்துசாமி குப்பந்துறை வாய்க்கால் கரையைப் பாா்வையிட்டாா். அப்போது, வாய்க்கால் கரையில் ஏற்பட்ட மண் அரிப்பை ஆய்வு செய்து கரையை பலப்படுத்துமாறு பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். மேலும், வலுவிழந்த மண் கரைகள் குறித்து கிராம மக்கள் பொதுப் பணித் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கே.சி.பி.இளங்கோ, உக்கரம் ஊராட்சித் தலைவா் முருகேசன், வட்டார வளா்ச்சிஅலுவலா் அப்துல் வகாப், அரியப்பம்பாளையம் திமுக பேரூா் செயலாளா் மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.