ஈரோடு மாவட்டத்தில்115 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் 115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM
ஈரோடு மாவட்டத்தில் 115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 97,797ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 146 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 95,594 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,557 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 643 போ் உயா்ந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 646ஆக உயா்ந்துள்ளது.