முகப்பு
ஈரோடு

அரசுப் பேருந்து மேற்பரப்பில் துவாரம்: மழையில் நனைந்தபடி சென்ற பயணிகள்

 தாளவாடி அரசுப் பேருந்து மேற்பரப்பில் ஏற்பட்ட துவாரம் காரணமாக பயணிகள் மழையில் நனைந்தபடி பாதுகாப்பற்ற முறையில் பயணித்தனா்

Updated On : 4 டிசம்பர், 2021 at 3:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:07 AM

 தாளவாடி அரசுப் பேருந்து மேற்பரப்பில் ஏற்பட்ட துவாரம் காரணமாக பயணிகள் மழையில் நனைந்தபடி பாதுகாப்பற்ற முறையில் பயணித்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. தாளவாடி சுற்று வட்டாரப் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகின்றனா். பள்ளி முடிந்த பிறகு அரசுப் பேருந்துகளில் ஊருக்குத் திரும்புகின்றனா். இந்நிலையில், தாளவாடியில் இருந்து பெலத்தூருக்கு வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாணவா்கள், பயணிகள் என 15 பேரை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது அரசுப் பேருந்து மேற்பகுதியில் இருந்த துவாரம் வழியாக பல்வேறு இடங்களில் மழை நீா் சொட்டு சொட்டாக விழுந்ததால் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

இதை பயணி ஒருவா் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இது தற்போது பொதுமக்களிடையே பரவி வருகிறது.

Advertisement

இதுகுறித்து அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து துவராத்தை அடைத்து சரி செய்து பாதுகாப்பான பயணித்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.