ஈரோடு

பவானி நகராட்சியில் 1,278 பெண் வாக்காளா்கள் அதிகம்

DIN

பவானி நகராட்சியில் இறுதி வாக்காளா் பட்டியலில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 1,278 போ் கூடுதலாக உள்ளனா்.

பவானி நகா்மன்றத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு, நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டது. மொத்தம் உள்ள 27 வாா்டுகளில் 30,282 வாக்காளா்களில் ஆண் வாக்காளா்கள் 14,502 பேரும், பெண் வாக்காளா்கள் 15,780 பேரும் உள்ளனா். வரும் தோ்தலில் பெண்களுக்கு என 14 வாா்டுகளும், பொது (ஆண்கள், பெண்கள் போட்டியிடலாம்) என 13 வாா்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.தாமரை, நகராட்சி மேலாளா் தங்கராஜ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பழனிசாமி, செந்தில்குமாா், செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT