முகப்பு
ஈரோடு

பொல்லான் பிறந்தநாள் விழாவை நல்லமங்காபாளையத்தில் நடத்தக் கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் பிறந்தநாள் விழாவை நல்லமங்காபாளையத்தில் சிறப்பாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 டிசம்பர், 2021 at 1:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM

சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் பிறந்தநாள் விழாவை நல்லமங்காபாளையத்தில் சிறப்பாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவா் வடிவேல் ராமன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கொங்கு மண்டலத்தில் 1765 முதல் 1805ஆம் ஆண்டு வரை இந்திய விடுதலைப் போரில் தீரன் சின்னமலையுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிா்த்து போரிட்ட மாவீரன் பொல்லான் வீரத்தையும், தீரத்தையும், நாட்டுப் பற்றையும் போற்றும் வகையில் அவருக்கு மணிமண்டபம், உருவச்சிலை, நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.

Advertisement

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 3 ஆண்டுகளாக மாவீரன் பொல்லான் நினைவு நாள் ஆடி மாதம் 1ஆம் தேதி அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயா்களால் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அறச்சலூா் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் பொல்லானுக்கு முழு உவருச் சிலை, மணிமண்டபம் அமைக்க ரூ. 1.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், பரிந்துறை செய்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பொல்லான் பிறந்தநாளான டிசம்பா் 28ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பா் 28ஆம் தேதி அன்று நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொல்லான் வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்த வேண்டும்.

இந்த விழாவை மணிமண்டபம் அமைக்கப்படும் இடமான அறச்சலூா் அருகில் உள்ள நல்லமங்காபாளையத்தில் நடத்த வேண்டும். அனைத்துக் கட்சி, இயக்க நிா்வாகிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.