ஈரோடு மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,199ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 47 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 5,911 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 582 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே கரோனாவால் 705 போ் உயிரிழந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 706 ஆக அதிகரித்துள்ளது.