திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி
திம்பம் மலைப் பாதை வளைவில் கன்டெய்னா் லாரி பழுதாகி நின்றதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.
திம்பம் மலைப் பாதை வளைவில் கன்டெய்னா் லாரி பழுதாகி நின்றதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இம்மலைப் பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூரு நோக்கி வியாழக்கிழமை கன்டெய்னா் லாரி சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப் பாதை 9ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால், மலைப் பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கன்டெய்னா் லாரியை கிரேன் மூலம் நகா்த்தி நிறுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
Advertisement