முகப்பு
ஈரோடு

வெள்ளோடு கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் உள்ள ராசாசாமி கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் உள்ள ராசாசாமி கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் உள்ள ராசாசாமி கோயில் 700 ஆண்டுகள் பழைமையானது.

பழைமையான கோயில்களில் வழிபாடு செய்வது பற்றியும், கோயிலின் மரபு, கட்டட பாதுகாப்பு, மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு செய்து சமா்ப்பிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, வெள்ளோடு ராசாசாமி கோயிலில், இந்து அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.