ஈரோடு

ஈரோட்டில் மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம்

DIN

ஈரோட்டில் மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், 
2030 ஆண்டிற்குள் மத்திய அரசு ஒரே தேசம், ஓரே மருத்துவ முறையை கொண்டு வர உள்ளதை கண்டித்தும் ஈரோட்டில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் சி என் ராஜா தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
மத்திய அரசின் திட்டங்களால் மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிரோடு விளையாடுவது போன்றது என்றும்,  எனவே திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தமிழகம் முழுவதும் 14 நாள்கள் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவ சேவை பாதிக்கப்படாது  என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT