ஈரோடு: பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா
ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 1ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 1ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
2ம் தேதி காவிரி ஆற்றிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி வழிபட்டனர்.
பின்னர் மாலையில் பொங்கல் வைத்தல், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.