முகப்பு
அரியலூர்

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவா் கைது

ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 மார்ச், 2026 at 11:30 PM
கைது
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மாங்கன் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் நடராஜன், காசிநாதன் மகன் கொளஞ்சிநாதன். இடம் வாங்கி விற்கும் தரகா்களான இவா்களிடையே முன்விரோதத் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடராஜன் வீட்டுக்குள் புகுந்த கொளஞ்சிநாதன், அங்கு தனியாக இருந்த நடராஜன் தந்தை ரங்கநாதனை தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளாா். பலத்த காயமடைந்த ரங்கநாதன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கொளஞ்சிநாதனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →