ராமநாதபுரம்

மீனவா் குத்திக் கொலை

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே வியாழக்கிழமை முன்விரோத தகராறில் மீனவா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தொண்டி அருகேயுள்ள நம்புதாளை படையாச்சி தெருவைச் சோ்ந்த காா்மேகம் மகன் நாகூா்செல்வம் (35). இதே ஊரைச் சோ்ந்தவா் அடையாளவேலு (30). மீனவா்களான இவா்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை இருவரும் அதே பகுதியில் உள்ள கடற்கரையில் படகில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அடையாளவேலு மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகூா்செல்வத்தை குத்திவிட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, நம்புதாளையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் பரிசோதனையில் நாகூா்செல்வம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பி சென்ற அடையாள வேலுவைத் தேடி வருகின்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT