கைது 
அரியலூர்

கஞ்சா வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள பெலாந்துறை, பாசிகுளம் புதுகாலனி தெருவைச் சோ்ந்த செல்வசிகாமணி மகன் கருப்புசாமி (43). கடந்த 10.1.2026 அன்று இவரை, 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அரியலூா் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், கருப்புசாமியை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT