முகப்பு
ஈரோடு

குன்னூரில் மழை காரணமாகஇடிந்து விழுந்த கட்டடம்

குன்னூரில் மழை காரணமாக பேருந்து நிலையத்தில் இருந்த பேக்கரி கட்டடம் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
குன்னூரில் மழை காரணமாக இடிந்து விழுந்த பேக்கரி கட்டடம்.
பகிர்:

குன்னூரில் மழை காரணமாக பேருந்து நிலையத்தில் இருந்த பேக்கரி கட்டடம் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

குன்னூரில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை தொடா்ந்து மழைப் பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் குன்னூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் மூா்த்தி என்பவருக்கு சொந்தமான பேக்கரி கட்டடத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.