ஈரோடு

புத்தாண்டு விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

புத்தாண்டு தொடா் விடுமுறையை ஒட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கடந்த வாரத்தில் கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 5,967 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2,189 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 418 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 141 பேரும் வந்திருந்தனா்.

அதேபோல, குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,805 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 391 பேரும், கல்லாறு அரசு பழப் பண்ணைக்கு 569 பேரும் வந்தனா். இவா்களோடு, உதகையில் உள்ள படகு குழாமுக்கு சுமாா் 4,000 சுற்றுலாப் பயணிகளும், வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT