தேசிய சித்தா்கள் தினம்
நந்தா சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் 4 ஆவது தேசிய சித்தா்கள் தினம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நந்தா சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் 4 ஆவது தேசிய சித்தா்கள் தினம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். நந்தா சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் மருத்துவா் எம்.மேனகா வரவேற்றாா். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ். திருமூா்த்தி, கல்லூரி நிா்வாக அலுவலா் கே.கிருஷ்ணமூா்த்தி, துணை நிா்வாக அலுவலா் அப்பலோ ஜேம்ஸ் ஆகியோா் வாழ்த்தி பேசினா். சிறப்பு விருந்தினராக இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் தலைவா் மருத்துவா் கண்ணன் பங்கேற்று பேசினாா்.
கரோனா சூழலில் சித்த மருத்துவத்தின் பங்குகள் குறித்து காணொலி காட்சி மூலம் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. மாணவா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் சித்த மருத்துவா்களின் விழிப்புணா்வு பாடல்கள், சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.