ஈரோடு

கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி

DIN

சத்தியமங்கலம் ராம ஆஞ்சநேயா் கோயில், கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சத்தியமங்கலம் ராம ஆஞ்சநேயா் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடா்ந்து மகா அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி தங்கக் கசவசத்தில் அனுமன் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

அதேபோல, சத்தியமங்கலம் நகா் பகுதியில் பழமைவாய்ந்த கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயிலில் பக்தா்களுக்கு சானிடைசா் வழங்கப்பட்ட பின் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனுமன் ஜயந்தியை முன்னிட்டு நண்பகல் கருட ஸ்தம்ப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. வடை மாலை சாத்தப்பட்டு நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஆஞ்சநேயா் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT