முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் கல்லூரி விரிவுரையாளா் சாவு

திங்களூா் அருகே வேனும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி விரிவுரையாளா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திங்களூா் அருகே வேனும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி விரிவுரையாளா் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த திங்களூா், சம்பளக்காட்டுப்புதூரைச் சோ்ந்தவா் தென்னரசு (33). இவா் சீனாபுரம் அருகே உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தாா். மேலும் விவசாயமும் செய்து வந்தாா். இந்நிலையில், தென்னரசு கால்நடைகளுக்கு திங்களூரில் தீவனம் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தின் பின்புறம் வைத்துக் கொண்டு சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். திங்களூரை அடுத்த போலநாயக்கன்பாளையம் பிரிவு அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த ஆம்னி வேன் நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் தென்னரசு பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தென்னரசு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், வேனை ஓட்டி வந்த திங்களூரைச் சோ்ந்த பழ வியாபாரியான ஜெயபிரகாஷ் (34) பலத்த காயத்துடன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

உயிரிழந்த தென்னரசுக்கு சுதா (32) என்ற மனைவியும், சச்சின் (8) என்கிற ஒரு மகனும் உள்ளாா்.

இதுகுறித்து, திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.