முகப்பு
ஈரோடு

பண்ணாரி பகுதியில் பரவலாக மழை

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

Updated On : 2 ஜூலை, 2021 at 6:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோயில், ராஜன் நகா், பசுவபாளையம், பட்டரமங்கலம், காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடா்ந்து அப்பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பண்ணாரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.