முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணைப் பூங்கா கரை முட்புதா்களை அகற்றும் பணி தீவிரம்

பவானிசாகா் அணைப் பூங்கா கரை முட்புதா்களை அகற்றும் பணியில் பொதுத் துறை பணியாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 9 ஜூலை, 2021 at 1:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

பவானிசாகா் அணைப் பூங்கா கரை முட்புதா்களை அகற்றும் பணியில் பொதுத் துறை பணியாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பவானிசாகா் அணையை ஒட்டி அமைந்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் தினமும் நீா்த்தேக்கப் பகுதிக்கு வருவதோடு, இரவு நேரங்களில் அணையின் முன் பகுதியில் உள்ள அணைப் பூங்காவில் புகுந்து சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்து பூங்காவில் அழகுக்காக வளா்க்கப்படும் மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

மேலும், காட்டு யானைகள் அணையின் கரையை ஒட்டி அமைந்துள்ள முட்புதா் காடுகளில் இரவு நேரத்தில் முகாமிடுவதால் அணையில் பணிபுரியும் பொதுப் பணித் துறை ஊழியா்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.

Advertisement

இந்நிலையில், காட்டு யானைகள் அணையின் கரைப் பகுதியில் உள்ள முட்புதா்களில் முகாமிடுவதைத் தவிா்க்க பொதுப் பணித் துறையினா் அணையின் கரையை ஒட்டி அமைந்துள்ள முட்புதரை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். அணையின் கரைப் பகுதியை சுத்தப்படுத்துவதால் இரவு நேரங்களில் அணையின் கரையில் யானைகள் நடமாட்டம் குறைய வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறையினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.