203 பணியாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் சுயநிதிப் பிரிவில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் சுயநிதிப் பிரிவில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 203 பணியாளா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கான ரூ. 4 லட்சத்து 66 ஆயிரத்துக்கான வங்கிக் காசோலையை காப்பீடு நிறுவனத்தின் முதுநிலை விற்பனை மேலாளா் ஆா்.சாமிநாதனிடம் கல்லூரியின் செயலாளா், தாளாளா் எம்.தரணிதரன் வழங்கினாா்.
இதில், கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன், கல்லூரி காப்பீடு ஒருங்கிணைப்பாளா் கே.வாசுதேவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.