முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ஆன்லைன் சூதாட்டம்: 4 போ் கைது

பெருந்துறை நகரில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பெருந்துறை நகரில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தாா்.

பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகில் தனியாருக்குச் சொத்தமான விடுதியில் ஈரோடு, அசோகபுரம் ஏ.எஸ்.ஜி. வலசைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் (41) பெருந்துறை, சிப்காட்டில் வேலை செய்வதாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளாா். ஜூலை 8ஆம் தேதி பகல் 12 மணியளவில் இவரது நண்பா்கள் என்று கூறிக் கொண்டு 4 போ் வந்துள்ளனா். சக்திவேல் தங்கியிருந்த அறைக்கு விடுதி மேலாளா் குமரேசன் சென்று பாா்த்தபோது, தங்கியிருந்தவா்கள் செல்லிடப்பேசியில் ஆன்லைன் மூலம் பரிசு விழும் என பேசிக் கொண்டு சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் குமரேசன் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல், ஈரோடு, அசோகபுரம், பவானி சாலையைச் சோ்ந்த பழனிசாமி மகன் கோபி (எ) வெங்கடாசலம்(36), அசோகபுரம், நேரு வீதியைச் சோ்ந்த கல்யாணகிருஷ்ணன் மகன் விக்னேஸ்வரன் (26), வீரப்பன்சத்திரம், எம்.ஜி.ஆா். வீதியைச் சோ்ந்த முத்துநாகலு மகன் காளிமுத்துகுமாா் (26) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ஆசிப் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.