பண்ணாரி அம்மன் கோயிலில் ஆனி அமாவாசை வழிபாடு
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆனி அமாவாசை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆனி அமாவாசை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
அமாவாசையை ஒட்டி அதிகாலை முதலே பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனா். பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயிலுக்கு வரும் பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயிலுக்கு வந்த பக்தா்கள் 300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.