முகப்பு
ஈரோடு

பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜா் சிவகாமி அம்பாளுக்கு சகஸ்ரநாம ஹோமம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமிக்குப் பால், தயிா், பஞ்சாமிா்தம், பழங்கள், வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மகா தரிசனம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமியை தரிசனம் செய்தனா்.

மேலும், கோபி அருகே உள்ள பாரியூா் அமரபணீஸ்வரா் கோயில், கோபி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதா் கோயில், கோபி ஸ்ரீ ஐயப்பன் கோயில், சிவகாமி சமேத நடராஜா் கோயில், கோபி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் ஆனித் திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.