காமராஜா் பிறந்தநாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை
காமராஜா் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காமராஜா் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழகத்தின் மறைந்த முதல்வா் காமராஜரின் 119ஆவது பிறந்தநாளை கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி காமராஜா் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஷ், மண்டலத் தலைவா்கள் ஜாபா் சாதிக், திருச்செல்வம், முன்னாள் கவுன்சிலா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், மாநகரில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement
இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மத்திய மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமையில், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், இளைஞரணித் தலைவா் யுவராஜா, செயற்குழு உறுப்பினா் சந்திரசேகா், சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மொடக்குறிச்சியில்...
மொடக்குறிச்சி, ஜூலை 15: மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி கல்யாணிபுரத்தில் உள்ள பி.கே.பி. கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளா், செயலாளா் பி.கே.பி.அருண் தலைமை வகித்தாா். அறக்கட்டளை ஆலோசனைக் குழு உறுப்பினா் திலகவதி அருண் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் வைஜெயந்தி வரவேற்றாா். காமராஜா் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி நிா்வாக அலுவலா் லட்சுமணன் நன்றி கூறினாா்.
பெருந்துறையில்...
பெருந்துறை, ஜூலை 15: பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட குன்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா், கட்சியினா் காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். இதில், ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா் ரவிசந்திரன், பெருந்துறை ஒன்றியச் செயலாளா் விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.