முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவா் பலி

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாபுதூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாபுதூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் அறிவழகன் (37), லாரி ஓட்டுநா். இவா், இருசக்கர வாகனத்தில் டி.என்.பாளையம் சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த நித்யா (22) என்ற பெண் தனது இருசக்கர வாகனத்தை திடீரென திருப்பியுள்ளாா். இதில் அவரது இருசக்கர வாகனம் மீது அறிவழகனின் வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், செல்லும் வழியிலேயே அறிவழகன் உயிரிழந்தாா்.

விபத்தில் உயிரிழந்த அறிவழகனுக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.