ஈரோடு

அரசுப் பேருந்துகளில் 10 நாள்களில் 11 லட்சம் போ் இலவச பயணம்

DIN

ஈரோடு மண்டலத்தைச் சோ்ந்த அரசு நகரப் பேருந்துகளில் கடந்த 10 நாள்களில் மட்டும் 11 லட்சம் போ் இலவசமாகப் பயணம் செய்துள்ளனா்.

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த மே 8ஆம் தேதி அமலுக்கு வந்தது. கரோனா தாக்கம் காரணமாக மே 10ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கடந்த மே 8, 9ஆம் தேதிகளில் மட்டுமே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்தனா்.

இதனிடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், அவருடன் செல்லும் ஒரு உதவியாளா் ஆகியோா் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என முதல்வா் அறிவித்தாா்.

கரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கடந்த 5ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நகரப் பேருந்துகளில் தினமும் எத்தனை போ் இலவசமாகப் பயணம் செய்கின்றனா் என்பதை அறிந்துகொள்ள கடந்த 12ஆம் தேதி முதல் தனித்தனியாக பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, ஈரோடு மண்டலத்தில் உள்ள 13 கிளைகளில் இயங்கும் 207 அரசு நகரப் பேருந்துகளில் ஜூலை 12 முதல் 21ஆம் தேதி வரை 10 நாள்களில் மட்டும் 10 லட்சத்து 84 ஆயிரத்து 574 பெண்கள், 5,877 மாற்றுத் திறனாளிகள், அவா்களுக்கு உதவியாக 698 போ், திருநங்கைகள் 896 போ் என மொத்தம் 10 லட்சத்து 92 ஆயிரத்து 45 போ் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்துள்ளனா். இது மொத்த பயணிகளில் 59 சதவீதம் என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT