ஈரோடு

விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மைப் பயிற்சி

DIN

தாளவாடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தாளவாடி வட்டாரம், கோட்டமாளம் கிராமத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறையின்கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ், ‘காய்கறி பயிரில் அங்கக வேளாண்மை’ எனும் தலைப்பில் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளா் வேளாண்மை உதவி இயக்குநா் வி.மகாலிங்கம் தலைமை வகித்தாா். விவசாயிகளுக்கு காய்கறிப் பயிரில் இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவம், அதன் அவசியம் பற்றியும், காய்கறிப் பயிரில் அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாக கூறினாா். துணை வேளாண்மை அலுவலா் க.பத்மநாபன் துறை சாா்ந்த மற்ற திட்டங்கள் பற்றி கூறி விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டாா்.

இப்பயிற்சியின் இறுதியில் விவசாயிசளுக்கு விதை கிராமத் திட்டத்தின்கீழ் இலவசமாக ராகி, பயறு வகை விதைகள் விநியோகம் செய்யப்பட்டன.

பயிற்சியில், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மாதேஷ், உதவி வேளாண்மை அலுவலா் இரா.பிரசாந்த், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் மா.சங்கா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT