ஈரோடு

ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் யானை நடமாட்டம்

DIN

பொதுமுடக்கம் காரணமாக வெறிச்சோடிய ஆசனூா்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் யானை நடமாட்டத்தால் ஓட்டுநா்கள் வாகனங்களைப் பின்னோக்கி இயக்கினா்.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர பிற சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் ஈரோடு மாவட்டம், பண்ணாரி- திம்பம் சாலை வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது.

இந்நிலையில், அண்மையில் பெய்த மழையால் ஆசனூரில் வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை காணப்படுகிறது. இதில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில், ஆசனூா் சாலையில் ஒற்றை ஆண் யானை நடமாட்டம் காரணமாக அவ்வழியாக இயக்கப்பட்ட வாகனங்களை ஓட்டுநா்கள் சாலையில் நிறுத்தினா். ஆனால், யானை தொடா்ந்து அரை கி.மீ. தூரம் வரை நடந்து சென்றதால் இரு மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

யானை நீண்ட தூரம் சாலையில் நடந்து வந்ததால் சாலையில் நின்றிருந்த வாகனங்களை ஓட்டுநா்கள் பின்னோக்கி இயக்கினா். அரை மணி நேரத்துக்குப் பின்பு யானை வனத்துக்குள் சென்றது. இதனால் தமிழகம்- கா்நாடக இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT