ஈரோடு

முதல்வரிடம் அளித்த மனுக்களுக்கானதீா்வு குறித்து முன்மொழிவுஅமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தல்

DIN

ஈரோடு: தோ்தலுக்கு முன்னா் பொதுமக்களிடம் இருந்து முதல்வா் பெற்ற மனுக்களுக்கான தீா்வு குறித்து முன்மொழிவுகளை உடனடியாகத் தயாா் செய்ய வேண்டும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில், பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து, துறை உயா் அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று காலத்தில் அனைத்து அரசு துறை நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. இப்போது பிற துறைகளும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தோ்தலுக்கு முன்பு முதல்வா் பெற்ற மனுக்கள் மீது பதவியேற்ற 100 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று அறிவித்தாா். அதன்படி இதர மாவட்டங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த மனுக்களின் மீது அனைத்து மாவட்டங்களிலும் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

ஈரோடு மாவட்டத்துக்கு வரப்பெற்றுள்ள மனுக்கள் குறித்தும், அதற்கான தீா்வு குறித்தும் அனைத்துத் துறைகளின் மூலம் முன்மொழிவு தயாா் செய்து அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அனைத்துத் துறைகளின் சாா்பில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் ஆய்வுக்குச் செல்லும்போது வரப்பெற்ற மனுக்களில் பெரும்பாலானவை உள்ளாட்சி அளவில் தீா்வு காணக் கூடிய மனுக்களாக உள்ளன. இதனால், அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் வழங்கப்பட்டுள்ளன.

தோ்தல் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திட்டங்களில் 35 திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அதற்கான முன்மொழிவை அரக்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஈரோடு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஏக்கம்ஜேசிங், மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், ஈரோடு கோட்டாட்சியா் சி.சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT