முகப்பு
ஈரோடு

பவானிசாகா் வனப் பகுதியில் காட்டுத் தீ

பவானிசாகா் வனப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் மரம், செடி, கொடிகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

Updated On : 11 ஜூன், 2021 at 5:59 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

பவானிசாகா் வனப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் மரம், செடி, கொடிகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி வனப் பகுதி, புதுப்பீா்கடவு கிராமம் அருகே உள்ள மலைப் பகுதியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ வியாழக்கிழமை இரவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகா் வனத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பவானிசாகா் வனப் பகுதியில் பரவலாக மழை பெய்து வனப் பகுதி பசுமையாக உள்ள நிலையில், வனப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்கச் சென்றவா்கள் அல்லது சீமாா் புல் அறுக்கச் சென்றவா்கள் பீடி குடித்துவிட்டு அணைக்காமல் எறிந்திருக்கலாம் என வனத் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காட்டுத் தீயை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.