முகப்பு
ஈரோடு

தேசிய விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் சாதனைகள் புரிந்ததற்காகவும், வீரதீர செயல் புரிந்ததற்காகவும் அளிக்கப்படும் மத்திய அரசின் விருதுகளுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன், 2021 at 5:22 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:53 AM

தேசிய அளவில் சாதனைகள் புரிந்ததற்காகவும், வீரதீர செயல் புரிந்ததற்காகவும் அளிக்கப்படும் மத்திய அரசின் விருதுகளுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ஆா்.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு ஆண்டுதோறும் நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

Advertisement

இதில், துரோணாச்சாரியாா் விருது, ராஷ்ட்டிரிய கேல் புரட்சகான் புரஸ்காா் விருது, அா்ஜூனா விருது, தயான் சந்த் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என 5 விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்டப் பிரிவுக்கு ஜூன் 16ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.