முகப்பு
ஈரோடு

மூங்கில் அரிசி சேகரிக்கும் மலைக் கிராம மக்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் பொதுமுடக்கம் காரணமாக வேலையின்றி தவிக்கும் மலைக் கிராம மக்கள் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 12 ஜூன், 2021 at 5:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:53 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் பொதுமுடக்கம் காரணமாக வேலையின்றி தவிக்கும் மலைக் கிராம மக்கள் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளன. தற்போது மூங்கில் காடுகளில் அரிசி பூத்துள்ளன. மலைவாழ் மக்கள் வனத்தில் சென்று வனப் பொருள்களைச் சேகரிக்க வனத் துறை அனுமதி அளித்துள்ளதால் மூங்கில் காடுகளில் கீழே விழும் மூங்கில் அரிசியை மலைவாழ் மக்கள் சேகரித்து வருகின்றனா்.

நிலத்தில் விழும் அரிசி மண்ணோடு கலந்துவிடுவதால், முறத்தில் அரிசி வேறு மண் வேறாக பிரித்தெடுக்கின்றனா். நாளொன்றுக்கு 3 கிலோ வரை கிடைப்பதாகவும், கிலோ ரூ. 150க்கு விற்கப்படுவதால் ஓரளவு கூலி கிடைப்பதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.