முகப்பு
ஈரோடு

தடுப்பூசி: ஈரோட்டில் அதிகாலை முதலே வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஈரோடு மாவட்டத்திற்கு 13,400 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்ததையடுத்து அதிகாலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
பகிர்:

ஈரோடு: ஈரோடு மாவட்டத்திற்கு 13,400 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்ததையடுத்து அதிகாலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

ஈரோட்டிற்கு நேற்று (சனிக்கிழமை) 13,400 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தன. இவை தடுப்பூசி மையங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, இன்று காலை முதல் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனால், தடுப்பூசி போடும் மையங்களில் பொது மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

நாட்டில் மொத்தம் 25.31 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.