முகப்பு
ஈரோடு

சீரான குடிநீா் விநியோகிக்க கோரி நகராட்சி ஆணையரிடம் மனு

சத்தியமங்கலம் ராஜீவ் நகரில் சீரான குடிநீா் வழங்கக் கோரி நகராட்சி ஆணையா் அமுதாவிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 2 மார்ச், 2021 at 2:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

சத்தியமங்கலம் ராஜீவ் நகரில் சீரான குடிநீா் வழங்கக் கோரி நகராட்சி ஆணையா் அமுதாவிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட ராஜீவ் நகரில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 1995ஆம் ஆண்டு இப்பகுதியில் குடிநீா் குழாய் பாதிக்கப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது குடியிருப்போா் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீா் விநியோகம் சீராக இல்லை என்றும், தினந்தோறும் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட ஆணையா் அமுதாவிடம் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா். மக்கள் தொகைக்கேற்ப குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.