ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ. 1 கோடி பறிமுதல்

DIN

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.05 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை வரை ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 43 லட்சத்து 81,800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதன்கிழமை ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரூ. 35.50 லட்சம், ஈரோடு மேற்குத் தொகுதியில் ரூ. 2.06 லட்சம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ. 57,000, பவானி தொகுதியில் ரூ. 70,000, அந்தியூா் தொகுதியில் ரூ. 1.58 லட்சம், பவானிசாகா் தொகுதியில் ரூ. 3.40 லட்சம் என ரூ. 43.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ. 1 கோடியே 4 லட்சத்து 93,740. இதில், ரூ. 22.65 லட்சம் ரொக்கம் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து திரும்ப பெற்றுச் செல்லப்பட்டது. மீதமுள்ள ரூ. 82.29 லட்சம் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

தவிர ஈரோடு கிழக்குத் தொகுதியில் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.05 கோடி பறிமுதல் செய்த நிலையில், உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் அத்தொகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT