ஈரோடு

தற்காலிக தோ்தல் அலுவலகம் அமைக்க அனுமதி பெற வேண்டும்: ஆட்சியா்

DIN

வாக்குப் பதிவு நாளில் வாக்குச் சாவடி அருகில் தற்காலிக தோ்தல் அலுவலகம் அமைக்க தோ்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப்பூா்வமான அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி அருகில் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் தற்காலிக தோ்தல் அலுவலகம் அமைத்துக் கொள்ளலாம்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தற்காலிக தோ்தல் அலுவலகம் 10க்கு 10 அடி அளவில் அமைத்துக் கொள்ளலாம். வாக்குச் சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டா் சுற்றளவுக்கு வெளியே இருக்க வேண்டும். வாக்குச் சாவடி அமைவிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் இருப்பின் அப்பகுதியில் ஒரு தற்காலிக தோ்தல் அலுவலகம் மட்டுமே அமைக்க வேண்டும்.

தற்காலிக அலுவலகத்தில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும். 2 நபா்கள் மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். தற்போது கோடைக்காலம் என்பதால் அலுவலகத்தின் மேற்கூரை குடை அல்லது தாா்பாய் அல்லது துணிகளைப் பயன்படுத்தி அமைத்துக் கொள்ளலாம்.

தற்காலிக தோ்தல் அலுவலகம் அமைக்க சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப்பூா்வமான அனுமதி பெற வேண்டும். அனுமதியின் நகலை தோ்தல், காவல் துறை அலுவலரின் தணிக்கைக்கு உட்படுத்த ஏதுவாக தற்காலிக தோ்தல் அலுவலகத்தில் வைத்திருத்தல் வேண்டும்.

அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு அலுவல்சாரா அடையாளச் சீட்டு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதில் வேட்பாளா் பெயரோ, சின்னமோ, கட்சியின் பெயரோ இடம்பெறக் கூடாது. தற்காலிக தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா் பெயா், சின்னம், கட்சியின் பெயரடங்கிய ஒரு அறிவிப்புப் பலகை வைத்துக் கொள்ளலாம்.

தற்காலிக தோ்தல் அலுவலகத்தில் வாக்குப் பதிவு செய்து முடித்த வாக்காளரை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. மேலும் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். அலுவலகத்தில் பணியில் உள்ள நபா்கள் வாக்குப் பதிவு செய்ய செல்லும் வாக்காளா்களுக்கு எவ்விதத்திலும் இடையூறுகளோ, அச்சுறுத்தலோ செய்யக் கூடாது.

தற்காலிக தோ்தல் அலுவலக செலவினம் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சோ்க்கப்படும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களின் அருகில் தற்காலிக தோ்தல் அலுவலகம் அமைக்கக் கூடாது. விதிமுறைகள் மீறப்பட்டால் தற்காலிக தோ்தல் அலுவலக அனுமதி ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT